சனி, 10 அக்டோபர், 2026

 


“
எந்தக் கப்பலில் நாம் இருக்கிறோம்
?”

 

இது நூஹ் (அலை) அவர்களின் கப்பல், வெள்ளம், அவருடைய மகன், அவர்களுக்கிடையிலான உரையாடல் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது.

 

ஆனால் சகோதரர்களே,

 

இது வெறும் வரலாற்றுக் கதை அல்ல.

 

குர்ஆன் நமக்கு நூஹ் (அலை) அவர்களின் காலத்து வெள்ளத்தை மட்டும் காட்டவில்லை.

 

நம்முடைய வாழ்க்கையைச் சுற்றி வருகின்ற வெள்ளங்களையும் சிந்திக்கச் செய்கிறது.

 

அன்றைக்கு தண்ணீரின் வெள்ளம்.

 

இன்று:

பொருளாசையின்/ ஒழுக்கக்கேட்டின்/ போதைப் பொருட்களின் / குடும்பச் சீரழிவின் / தவறான கலாச்சாரத்தின் வெள்ளம்,

சமூக ஊடகங்களின் கட்டுப்பாடற்ற தாக்கம்,

அல்லாஹ்வை மறக்கச் செய்யும் உலக வாழ்க்கை.

அன்றைக்கு ஒரு கப்பல் பாதுகாப்பிற்கான வழியாக இருந்தது.

 

இன்று நம்முடைய கப்பல் என்ன?

குர்ஆன்./ ஸுன்னா/ தொழுகை/ தக்வா/ அல்லாஹ்வின் மீது தவக்குல்.

.ஒவ்வொருவரும் நம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்போம்:

“வெள்ளம் வரும்போது நான் எந்தக் கப்பலில் இருப்பேன்?”

 

 1. மலை போன்ற அலைகள் — 11:42

அல்லாஹ் கூறுகிறான்:

 وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ

“அந்தக் கப்பல் அவர்களை மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அழைத்துச் சென்றது.

கற்பனை செய்து பாருங்கள்.

மலை போன்ற அலைகள்./ எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

மனிதனுடைய சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பேரழிவு.

ஆனால் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள்.

அதனால்தான் கப்பலின் வெளியே பேரழிவு இருந்தாலும், உள்ளே பாதுகாப்பு இருந்தது.

 

இங்கே ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடம்:

சூழ்நிலை பாதுகாப்பைத் தீர்மானிக்காது; அல்லாஹ்வுடனான நமது தொடர்புதான் பாதுகாப்பைத் தீர்மானிக்கிறது.

இன்றைய உலகத்தைப் பாருங்கள்.

நாம் வாழும் சமூகம் பல விதமான அழுத்தங்களை எதிர்கொள்கிறது.

நமது பிள்ளைகள் பல்வேறு கலாச்சாரத் தாக்கங்களை எதிர்கொள்கிறார்கள்.

இளைஞர்கள் பல்வேறு ஆசைகளுக்கும் கவர்ச்சிகளுக்கும் மத்தியில் வாழ்கிறார்கள்.

அத்தகைய சூழலில் ஒரு முஸ்லிம்:

 

“என் பிள்ளையை எப்படி பாதுகாப்பது?”

பணம் கொடுப்பது/ கல்வி கொடுப்பது/ சொத்து கொடுப்பது மட்டும் பாதுகாப்பல்ல.

ஈமானைக் கொடுப்பதே மிகப்பெரிய பாதுகாப்பு.

 

 2. “என் அன்பு மகனே!” — 11:42

 

4 நிமிடங்கள்

 

 “நூஹ் தமது மகனை அழைத்தார்.”

 

 يَا بُنَيَّ ارْكَب مَّعَنَا

“என் அன்பு மகனே! எங்களுடன் ஏறிக்கொள்.”

கவனியுங்கள்…உலகமே அழிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு தந்தையின் இதயத்தில் மகனுக்கான அன்பு இருக்கிறது.

 

நூஹ் (அலை) அவருடைய மகனை மீட்பதற்கான கடைசி வாய்ப்பையும் பயன்படுத்துகிறார்.

 

இது நமக்கு குடும்ப தஃவாவின் ஒரு முக்கியப் பாடம்.

நமது குழந்தைகள் தவறான பாதையில் சென்றால்:

அவர்களை உடனே ஒதுக்கிவிடுவது தீர்வல்ல.

அவர்களை அன்புடன் அழைக்க வேண்டும்.

“மகனே!”“மகளே!”அல்லாஹ்விடம் திரும்புவோம்.

 

தொழுகைக்கு வருவோம்./குர்ஆனுடன் தொடர்பை ஏற்படுத்துவோம்.

என்று சொல்ல வேண்டும்.

 

நூஹ் (அலை) அவர்களின் அழைப்பில் அன்பும் இருந்தது.

 

ஆனால் உண்மையை மறைக்கும் சமரசம் இல்லை.

 

அவர் தொடர்ந்து:

 

> وَلَا تَكُن مَّعَ الْكَافِرِينَ

“காஃபிர்களுடன் இருக்காதே.”என்று கூறுகிறார்.

அன்பு இருக்க வேண்டும்; ஆனால் கொள்கை விட்டுக்கொடுக்கப்படக் கூடாது.

3. “மலை என்னைக் காப்பாற்றும்!” — 11:43

மகன் கூறுகிறான்:

“என்னை இந்தத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் மலையில் நான் ஏறிக்கொள்வேன்.”

நூஹ் (அலை) சொல்கிறார்:

கப்பலுக்கு வா.மகன் சொல்கிறான்:

மலை என்னைக் காப்பாற்றும்.இதுதான் மனிதனின் ஒரு பெரிய தவறு.அவன் அல்லாஹ்வின் கட்டளையை விட தனது சொந்த கணக்கை நம்புகிறான்.

இன்று நாமும் இதே தவறைச் செய்யக்கூடாதா?

“என்னிடம் பணம்/ சொத்து/நல்ல தொடர்புகள்/ பதவி/அதிகாரம் இருக்கிறது.”இவை எல்லாம் காரணங்கள்.

 

ஆனால் காரணங்களை செயல்படுத்துபவன் யார்? அல்லாஹ்.

நூஹ் (அலை) கூறுகிறார்: لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَن رَّحِمَ

“இன்று அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து பாதுகாப்பவன் யாருமில்லை; அவன் கருணை புரிந்தவர்களைத் தவிர.”

இதுதான் தவக்குலின் உண்மை. காரணங்களைப் பயன்படுத்துவோம்; ஆனால் காரணங்களையே நம்பிவிடக்கூடாது.

மருந்து எடுப்போம்./ஆனால் குணப்படுத்துபவன் அல்லாஹ்.

வியாபாரம் செய்வோம்./ஆனால் ரிஸ்க் கொடுப்பவன் அல்லாஹ்.

பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வோம். ஆனால் உண்மையான பாதுகாவலன் அல்லாஹ்.

 

“வானமே! நிறுத்திக்கொள்” — 11:44

அல்லாஹ் கூறுகிறான்:

“பூமியே! உன் தண்ணீரை விழுங்கிக்கொள்.”

“வானமே! மழையை நிறுத்திக்கொள்.”

பிறகு:“காரியம் முடிக்கப்பட்டது.”

மனிதன் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தை அல்லாஹ் ஒரு கட்டளையால் நிறுத்துகிறான்.

 

இதிலிருந்து நமக்கு நம்பிக்கை கிடைக்கிறது.

இன்று நமது பிரச்சினை எவ்வளவு பெரியதாக இருந்தாலும்:

அல்லாஹ்வுக்கு அது பெரியதல்ல.

நமது குடும்பத்தில் பிரச்சினையா?அல்லாஹ்விடம் திரும்புங்கள்.

சமூகத்தில் பிரச்சினையா? அல்லாஹ்விடம் திரும்புங்கள்.

தஃவாவில் தடையா? அல்லாஹ்விடம் திரும்புங்கள்.

வாழ்க்கையில் சோதனையா?

சப்ர் + துஆ + தவக்குல்.

 5. “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்” — 11:45

நூஹ் (அலை) கூறுகிறார்: رَبِّ إِنَّ ابْنِي مِنْ أَهْلِي

“என் இறைவா! என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்.”

 

> وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ “உன்னுடைய வாக்குறுதி உண்மையானது.”

 

> وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ “நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”

 

இங்கே ஒரு தந்தையின் வேதனையை நாம் உணர்கிறோம்.

ஆனால் நூஹ் (அலை) அல்லாஹ்வின் தீர்ப்பை நிராகரிக்கவில்லை.

அவர் அல்லாஹ்வின் வாக்குறுதியை நம்புகிறார்.

இதிலிருந்து:ஒரு முஃமினின் துஆவிலும் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

நாம் துஆ கேட்போம்.ஆனால் முடிவு அல்லாஹ்விடம்.

நாம் விரும்புவதை கேட்போம்.ஆனால் அல்லாஹ் எதைத் தேர்ந்தெடுக்கிறானோ அதுவே இறுதியில் நமக்கு சிறந்தது.

 

 6. “அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல” — 11:46

இப்போது இந்தப் பகுதியின் மிகவும் ஆழமான வசனம்:

 

 يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல.”

இது நம்மை ஆழமாக சிந்திக்க வைக்க வேண்டும்.

அவன் நூஹ் (அலை) அவர்களின் மகன்.

ஆனால் அந்த உறவு அவனுக்கு மறுமை பாதுகாப்பைக் கொடுக்கவில்லை.

இதிலிருந்து ஒரு குர்ஆனிய உண்மை:

இரத்த உறவு மட்டும் மறுமை வெற்றியைத் தராது.

 

நாம் யாருடைய குடும்பத்தில் பிறந்தோம் என்பது முக்கியமானதாக இருக்கலாம்.ஆனால் அல்லாஹ்விடம் நமது மதிப்பு:

ஈமான் + நல்ல செயல் + தக்வா.

ஒருவர்:“என் குடும்பம் மார்க்கக் குடும்பம்.”/“என் தந்தை நல்லவர்.”

“என் தாத்தா பெரிய ஆலிம்.”என்று சொல்வதால் மட்டும் அவர் பாதுகாப்பைப் பெற முடியாது.

ஒவ்வொருவரும் தனது ஈமானையும் அமலையும் கொண்டு அல்லாஹ்விடம் நிற்க வேண்டும்.

நமது பிள்ளைகளுக்கு நாம் என்ன விட்டுச் செல்கிறோம்?

சொத்தா?/வீடா?/வியாபாரமா?/பணமா?

அவை தேவையானவை.ஆனால் அதைவிட முக்கியமானது:

ஈமான்./தொழுகை./குர்ஆன்/.தக்வா./நல்லொழுக்கம்.

நூஹ் (அலை) சம்பவம் ஒவ்வொரு பெற்றோரிடமும் கேட்கிறது:

“உங்கள் குழந்தைகளுக்கு உலகத்தை மட்டும் கொடுக்கிறீர்களா? மறுமைக்கான பாதையையும் கொடுக்கிறீர்களா?”

 

 7. “அறிவில்லாததை கேட்பதிலிருந்து பாதுகாப்பு” — 11:47

நூஹ் (அலை) உடனடியாக:

 

> رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ “என் இறைவா! உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.”

என்று கூறுகிறார்.

அடுத்து: أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ

“எனக்கு அறிவில்லாததை உன்னிடம் கேட்பதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.”என்ன ஒரு பணிவு!

ஒரு நபி……அல்லாஹ் விளக்கியவுடன் தனது புரிதலைத் திருத்திக் கொள்கிறார்.

இதிலிருந்து நமக்கு ஒரு முக்கியப் பாடம்:

உண்மையான அறிவு மனிதனை பணிவாக்க வேண்டும்.

 

இன்று நமக்கு தகவல்கள் அதிகம்.ஆனால் அறிவு அதிகமா?

 

சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வந்தால் உடனே பகிர்கிறோம்.

 

ஒரு ஹதீஸ் வந்தால் உடனே:“நபி ﷺ கூறினார்கள்...”

 

என்று பகிர்கிறோம்.ஆனால் ஆதாரம் என்ன?என்று பார்க்கவில்லை.

 

குர்ஆனின் இந்தப் பாடத்தை நினைவில் கொள்வோம்:

தெரியாததைப் பற்றி பேசாதே.

 8. “என்னை மன்னித்து அருள்புரிவாயாக” — 11:47

 

 

நூஹ் (அலை) தொடர்ந்து:

 وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ

“நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால், நான் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவேன்.”

இங்கே ஒரு முஃமினின் மனநிலை தெரிகிறது.

அவரிடம் நபித்துவம் இருக்கிறது. ஆனால் அவர் அல்லாஹ்வின் மன்னிப்பை நாடுகிறார்.

நாமும் எவ்வளவு அமல்கள் செய்தாலும்:எனது அமல் போதும்” என்று நினைக்கக்கூடாது.  நமக்கு தேவையானது:அல்லாஹ்வின் மன்னிப்பு.

அல்லாஹ்வின் ரஹ்மத்.

 

 9. “ஸலாம் மற்றும் பரக்கத்” — 11:48

 

அல்லாஹ் கூறுகிறான்:> اهْبِطْ بِسَلَامٍ مِّنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ

 

“எங்களிடமிருந்து அமைதியுடனும் பரக்கத்துடனும் இறங்குவீராக.”

சகோதரர்களே!சோதனை முடிந்தது.

அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்தவர்கள் புதிய வாழ்க்கைக்குள் செல்கிறார்கள். இதில் நமக்கு ஒரு நம்பிக்கை:சோதனை நிரந்தரமானது அல்ல.

இன்று கஷ்டம் இருக்கலாம்.நாளை அல்லாஹ் நிம்மதி கொடுக்கலாம்.

இன்று கதவு மூடியிருக்கலாம்.நாளை அல்லாஹ் புதிய கதவைத் திறக்கலாம்.

எனவே சோதனையில் சப்ர்./அல்லாஹ்வின் வாக்கில் நம்பிக்கை/ தீர்ப்பில் திருப்தி.

 

10. “எனவே பொறுமையாக இருங்கள்” — 11:49

அல்லாஹ் கூறுகிறான்: تِلْكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهَا إِلَيْكَ

“இவை மறைவான செய்திகளில் உள்ளவை; அவற்றை நாம் உமக்கு வஹியாக அறிவிக்கிறோம்.”

> فَاصْبِرْ “எனவே பொறுமையாக இருப்பீராக!”

இந்த முழு வரலாற்றின் முடிவில் அல்லாஹ் நபி ﷺ அவர்களுக்கு சொல்வது:பொறுமையாக இருங்கள்.

ஏன்?நூஹ் (அலை) பொறுமையாக இருந்தார்.நீண்ட காலம் தஃவா செய்தார்.

மக்கள் மறுத்தார்கள்.கேலி செய்தார்கள்.சொந்த மகன் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.இறுதியில்: إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ

“நல்ல முடிவு தக்வா உடையவர்களுக்கே.” இதுதான் முஃமினின் நம்பிக்கை.

 

மக்கள் நம்மை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.

நமது தஃவா பணியை விமர்சிக்கலாம்.நல்ல காரியத்தில் தடைகள் வரலாம்.குடும்பத்திலேயே எதிர்ப்பு இருக்கலாம்.ஆனால்:

சத்தியத்தின் பாதையில் சப்ருடன் நிலைத்திருந்தால், இறுதி முடிவு அல்லாஹ்வின் கையில் உள்ளது.

 

 இறுதி சிந்தனை — “எந்தக் கப்பலில் நாம் இருக்கிறோம்?”

சகோதரர்களே!நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் இரண்டு இடங்கள் இருந்தன:கப்பலுக்குள்./ கப்பலுக்கு வெளியே.

வெளியில் எண்ணற்ற மக்கள்./உள்ளே குறைவான மக்கள்.

பாதுகாப்பு என்பது எண்ணிக்கையில் இல்லை.

அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிதலில் இருந்தது.

இன்றும் நமக்கு இரண்டு பாதைகள்.

ஒரு பாதை: உலகம் சொல்வதைப் பின்பற்றுவது.

மற்றொரு பாதை: அல்லாஹ் சொல்வதைப் பின்பற்றுவது.

 

நாம்/குடும்பம்/ பிள்ளைகள் எந்தப் பாதையில் இருக்கிறோம்?

நிறைவு துஆ

 

எங்கள் இறுதி முடிவை நல்ல முடிவாக ஆக்குவாயாக.

 

> إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِينَ

 

“நிச்சயமாக நல்ல முடிவு தக்வா உடையவர்களுக்கே.”

 

ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக